நடிகர் அஜித்குமார் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. ஹாலிவுட் தரத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க, வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கின்றார். நடிகை பிரியா பவானி சங்கர், பிக் பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் அவர்கள் உயிரிழந்ததால் மொத்த படக் குழுவும் சோகத்தில் மூழ்கியது. அதன்பிறகு மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது. சமீபத்தில் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
Actor #AK is back in Chennai..
He was shooting for #VidaaMuyarchi in Azerbaijan 🇦🇿 pic.twitter.com/Xj7W21Az9H
— Ramesh Bala (@rameshlaus) November 24, 2023
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். அஜர்பைஜான் நாட்டில் ‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்துள்ளதால், 5 நாட்களுக்கு ஒரு சின்ன பிரேக் எடுப்பதற்காக நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித் கோட் சூட்டில் மாஸாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
இஸ்ரேல்-ஹமாஸ் தற்காலிக போர்நிறுத்தம்… இன்று முதல் அமலுக்கு வந்தது!
27 பேரை கடித்த நாய்க்கு ‘ரேபிஸ்’: மருத்துவர்கள் எச்சரிக்கை!