நீலகிரியில் குரங்கு காய்ச்சல் பீதி!

By Balaji

|

Published on 12 Jan 2018, 12:00 AM

குரங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கத் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில எல்லையில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள மாநிலம் சுல்தான்பத் தேரியில் ஒருவருக்குக் குரங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ADVERTISEMENT

கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லைகளில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் பேருக்கு குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. இந்தக் காய்ச்சல் குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்பதால் மாவட்டத்தில் எங்குக் குரங்குகள் இறந்தாலும் அதன் ரத்த மாதிரியைச் சேகரித்து மணிப்பாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது.

மேலும் இந்தக் காய்ச்சல் குரங்குகளின் உடலில் உள்ள பேன்கள் மூலம் பரவக்கூடியது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இந்தக் காய்ச்சல் உறுதி செய்யப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel