கிச்சன் கீர்த்தனா – முந்திரி புலாவ்

By Balaji

|

Published on 18 Dec 2017, 12:00 AM

பிரியாணிக்கும் புலாவ்வுக்கும் வித்தியாசம் என்னவென்றால், புலாவ் ஃப்ரைட் ரைஸ் போல இஞ்சி, பூண்டு, தயிர் மற்றும் மசாலா பொருள்கள் அதிகம் சேர்க்காமல் செய்யப்படும். எத்தனையோ விதமான புலாவ்களும் பிரியாணி செய்யும் முறைகளிலேயே செய்கின்றனர். ஆனால், தனித்துவமாக நாம் செய்யும் ரெசிபிகள் இருக்க வேண்டுமே… இதோ தனித்துவமாக முந்திரியைக்கொண்டே செய்யலாம்.

**தேவையானவை:**

ADVERTISEMENT

உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப், முந்திரி – ஒரு கப், வெங்காயம் – 2 மற்றும் 3, மிளகாய்த்தூள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் – சிறிதளவு, சீரகப்பொடி – சிறிதளவு, வெண்ணெய் – சிறிதளவு, பட்டை – சிறிதளவு, சீரகம் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப

**செய்முறை:**

ADVERTISEMENT

முந்திரியை நெய்யில் சிவக்க வறுத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேவையான பொடிகளைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பட்டை, சீரகத்தை தாளிக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து மொறுமொறுவென ஆகும்படி வறுத்துக் கொள்ளவும்.

ADVERTISEMENT

பிறகு எல்லா பொடிகளையும் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.

அதனுடன் வடித்த சாதம், வறுத்த முந்திரி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

சுவையான முந்திரி புலாவ் தயார்.

**கீர்த்தனா சிந்தனைகள்:**

எப்பவும் நம்மள உசுப்பேத்தி விடுறதுக்கின்னே நம்மகூட ஒருத்தன் இருப்பான். அவன் பேசுறப்போ கேட்டும் கேட்காதது போல இருந்தா நாம நல்லா இருக்கலாம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel