50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான Poco C65: சிறப்பம்சங்கள் என்ன?

Published On:

| By christopher

Poco C65 with budget price

போகோ நிறுவனம் தனது புதிய Poco C65 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, சந்தையில் உள்ள Poco C55 ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்சனாக அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், மீடியாடெக் ஹெலியோ G85 SoC ப்ராசஸர், 5000mAh பேட்டரி, 50MP கேமரா என பல அற்புதமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. Poco C65 with budget price

Poco C65 விலை என்ன?

ADVERTISEMENT

போகோ நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் 6GB ரேம் + 128GB சேமிப்பு, 8GB ரேம் + 256GB சேமிப்பு என 2 வகைகளில் அறிமுகமாகியுள்ளது.

அதில் 6GB ரேம் + 128GB சேமிப்பு வசதி கொண்ட போகோ சி65 மாடல் 129 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.10,700) என்ற விலையிலும், 8GB ரேம் + 256GB சேமிப்பு வசதி கொண்ட போகோ சி65 மாடல் 149 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.12,400) என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் ஊதா என 3 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

முதலாவதாக, அமெரிக்காவில் மட்டுமே விற்பனையாகவுள்ள இந்த Poco C65 ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

Poco C65 சிறப்பம்சங்கள் என்ன?

2 நானோ சிம் வசதியுடன் அறிமுகமாயுள்ள போகோ சி65 ஸ்மார்ட்போன், 6.74-இன்ச் HD+ (1,600 x 720 பிக்சல்) திரையை கொண்டுள்ளது. 90Hz திரை புதுப்பிப்பு விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆகிய திரை அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 மென்பொருளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. முன்பு கூறியது போல போகோ சி65 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹெலியோ G85 SoC ப்ராசஸரை கொண்டுள்ளது. Poco C65 with budget price

கேமராவை பொறுத்தவரை, பின்புறத்தில் 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா என 2 கேமராக்கள் போகோ சி65 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. செல்ஃபிக்களுக்காக 8MP வாட்டர் நாட்ச் காமெராவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

போகோ சி65 5000mAh அளவிலான பிரம்மாண்ட பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. 4G வசதியை மட்டுமே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், வை-பை, ப்ளூடூத் 5.1, ஜி.பி.எஸ், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

குழந்தைகள் மருத்துவமனைக்கு நவீன இயந்திரம் வழங்கிய கமல்ஹாசன்

நெருங்கும் தீபாவளி: நவ.10 வரவு வைக்கப்படும் உரிமைத் தொகை?

கமல்ஹாசன் பிறந்தநாள்: ஸ்டாலின், பினராயி விஜயன் வாழ்த்து!

சத்தீஸ்கர்: வாக்குப்பதிவு தொடங்கியது… குண்டுவெடிப்பால் பதற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share