kamalhaasan gives water filter machine

குழந்தைகள் மருத்துவமனைக்கு நவீன இயந்திரம் வழங்கிய கமல்ஹாசன்

சினிமா தமிழகம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி அவரது கட்சியினரும், ரசிகர்களும் மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை எழும்பூர்  தமிழ்ச் சாலையில் இருக்கும் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில், காற்றின் ஈரப்பதத்திலிருந்து நீர் தயாரித்து அளிக்கும் இயந்திரம் ஒன்றை மருத்துவமனைக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 9 மணி அளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்குகொண்ட கமல்ஹாசன், ரூ.10 இலட்சம் மதிப்புள்ள இயந்திரத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் உரிய முறையில் ஒப்படைத்து தொடங்கி வைத்தார்.

அவருடன், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் மக்கள் நீதி மய்யம், கமல் பண்பாட்டு மையம் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இயற்கை வேளாண்மைக்குச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஏன்?

சத்தீஸ்கர்: வாக்குப்பதிவு தொடங்கியது… குண்டுவெடிப்பால் பதற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *