CM stalin wish kamalhassan

கமல்ஹாசன் பிறந்தநாள்: ஸ்டாலின், பினராயி விஜயன் வாழ்த்து!

அரசியல்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல் கட்சியின் தலைவர் என்று பன்முகத்தன்மை கொண்டவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7) தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.

பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசனுக்கு பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நலம் சூழ வாழிய பல்லாண்டு!” என்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், “அன்புள்ள கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு சிறந்த கலைஞராகவும், சமூக மற்றும் அரசியல் ஆர்வலராகவும், நீங்கள் மக்களின் இதயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு இன்னும் பல மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வருடங்கள் அமைய வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியுள்ளார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, “என்னை பொறுத்தவரை ஐயா சிவாஜி அவர்களுக்கு பிறகு உலகின் தலைசிறந்த நடிகன் யாரென்று கேட்டால் அது கமல்ஹாசன் தான். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்” என்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

சத்தீஸ்கர்: வாக்குப்பதிவு தொடங்கியது… குண்டுவெடிப்பால் பதற்றம்!

இயற்கை வேளாண்மைக்குச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *