magalir urimai thogai

நெருங்கும் தீபாவளி: நவ.10 வரவு வைக்கப்படும் உரிமைத் தொகை?

தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி முதல் வங்கி கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தற்போது 8 லட்சம் பேர் உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளன. மேல்முறையீட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது.

இதனிடையே வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைக்க கோரிக்கைகள் எழுந்தன.

அதனை ஏற்று வரும் 10 ஆம் தேதி உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

69வது பிறந்தநாள்: குழந்தைகள் மருத்துவமனைக்கு நவீன இயந்திரம் வழங்கிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் பிறந்தநாள்: ஸ்டாலின், பினராயி விஜயன் வாழ்த்து!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *