அண்ணாமலை, ரகுமான் சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகளுக்கு பதவி!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று (அக்டோபர் 11) பிறப்பித்துள்ள உத்தரவில்,

ADVERTISEMENT

சிவில் சப்ளைஸ் சிஐடி டிஜிபியாக இருக்கும் வன்னிய பெருமாள் சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை டிஜிபி/இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

காவல்துறை பயிற்சிக் கல்லூரி ஐஜியாக இருந்த ஆா்.தமிழ்சந்திரன் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் ஐஜியாகவும்,

ADVERTISEMENT

தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் ஐஜியாக இருந்த பி.கே.செந்தில் குமாரி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகவும்,

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த சி.மகேஷ்வரி, திருநெல்வேலி மாநகர ஆணையராகவும்,

ADVERTISEMENT

தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் கூடுதல் இயக்குநர் ஜோஷி நிர்மல் குமார் சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த திஷா மிட்டல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும்

சென்னை வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக இருந்த அபிஷேக் தீட்சித், சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு காவல்துறை இணை ஆணையராகவும்

சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் சாமூண்டீஸ்வரி காவல்துறை தலைமையக டிஐஜியாகவும்,

திருவாரூர் எஸ்.பி. டி.பி.சுரேஷ் குமார், தென்காசி எஸ்.பியாகவும்,

தென்காசி எஸ்.பி. சாம்சன் சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பியாகவும்,

சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் திருவாரூர் எஸ்.பி.யாகவும்,

நீலகிரி எஸ்.பி.பிரபாகர் கரூர் எஸ்.பி.யாகவும்

கரூர் எஸ்.பி.சுந்தரவதனம் , கன்னியாகுமரி எஸ்.பியாகவும்

கன்னியாகுமரி எஸ்.பி  ஹரி கிரண் பிரசாத் ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழு எஸ்.பி.யாகவும்,

ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழு எஸ்.பி. சுந்தரவடிவேல், நீலகிரி எஸ்.பி.யாகவும்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபா சத்யன் சென்னை டிஜிபி தலைமையக எஸ்.பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கன்சர்ட்டில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் சர்ச்சையை தொடர்ந்து பள்ளிக்கரணை துணை ஆணையராக இருந்த தீபா சத்யன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

அதுபோன்று வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்த்தில் அண்ணாமலையை கைது செய்யவில்லை என்பதால் வள்ளுவர் கோட்டம் பகுதியை உள்ளடக்கிய சட்டம் ஒழுங்கு ஜே.சி. திஷா மிட்டல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகன் – எடப்பாடி நெருக்கம்… ஸ்டாலின் கோபம்!

INDvsAFG: ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை முறியடித்த ரோகித் சர்மா… இந்தியா அபார வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share