தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்ததில் இருந்து நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக அரசு இன்று (மே 20) பிறப்பித்த உத்தரவில், சென்னை காவல்துறையின் நிர்வாக டிஜிபி வெங்கட்ராமன் சிவில் சப்ளை சிஐடி டிஜிபி யாகவும்,
சென்னை காவல்துறை தலைமையக ஐஜி பவானிஸ்வரி, சிங்கப்பெண் சிறப்பு படை (புதிதாக உருவாக்கப்பட்ட பதவி) ஐஜி ஆகவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி அவினாஷ் குமார், சென்னை காவல்துறை தலைமையக ஐஜியாகவும்,
பிரவீன் குமார் அபினபு வடக்கு மண்டல ஐஜியாகவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவண சுந்தர், சென்னை குற்றப்பிரிவு ஐஜியாகவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி ஐ ஜி மகேஷ், வேலூர் சரக டிஐஜியாகவும்
சென்னை தெற்குப் போக்குவரத்து காவல்துறை டிஐஜி-யாக இருந்த விஜயகுமார், சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு டிஐஜி ஆகவும்,
புதுக்கோட்டை எஸ்பி அபிஷேக் குப்தா, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆகவும்,
ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை எஸ் பி, நீலகிரி மாவட்ட எஸ் பி ஆகவும்,
சென்னை சைபர் கிரைம் எஸ் பி -I, ஷஹ்னாஸ் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஆகவும்,
கள்ளக்குறிச்சி எஸ்பி அரவிந்த் காஞ்சிபுரம் எஸ் பி ஆகவும்,
தாம்பரம் ஆணையரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அல்லட்டிபள்ளி பவன் குமார் ரெட்டி, கோயம்புத்தூர் எஸ் பி ஆகவும்,
கோயம்புத்தூர் எஸ் பி கார்த்திகேயன், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும்,
திருவண்ணாமலை டவுன் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும்,
விழுப்புரம் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் ரவீந்திர குமார், புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
