வீரபாண்டியார்ன்னு ஒருத்தர் இருந்தாரு தெரியுமா? சேலத்தில் கனிமொழி.

By Balaji

|

Published on 19 Apr 2016, 12:00 AM

சேலத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய கனிமொழி ‘ஜெயலலிதா ஆட்சியில் பெருகிய மது ஆலைகள், பெருகாத வேலைவாய்ப்புகள் இவைகள் குறித்து பேசினார். இரவு வரை தனது பிரச்சாரத்தை தொடர்ந்தவர் பிரச்சார பாய்ன்ட்டில் கெங்கவல்லி தொகுதிக்கான பாய்ன்ட் இல்லை. தொலைதூரம் என்பதால் அந்த பாய்ன்ட் சேர்க்கவில்லை. இதையறிந்த கனிமொழி ‘ இங்கே பெண் வேட்பாளர் நிற்கிறார். அவருக்காக பிரச்சாரம் செய்யாமல் செல்வது பெண்ணே புறக்கணித்தது போல ஆகிவிடுமே’ என நிர்வாகிகளிடம் தெரிவித்தவர் கெங்கவல்லி தொகுதிக்கான தம்மம்பட்டியில் பிரச்சாரத்தை நிகழ்த்தினார்.

‘ உங்கள் தொகுதி வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி படித்தவர். பட்டதாரி. சேலத்தின் முதல் பெண் மேயராக இருந்து பல திட்டங்களை கொண்டு வந்தவர். படித்த இளம் பெண் வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் எளிதில் அவரை அணுகி நலத்திட்டங்களை பெறலாம்’ என்றவர் தொடர்ந்து , ‘ ‘வீரபாண்டியார்ன்னு ஒருத்தர் இருந்தாரு தெரியுமா?’ என்றார். கூட்டத்தில் இருந்து ‘தெரியும்’ என குரல் ஒலித்தது. இப்போ இருக்குற அமைச்சர் யாரு? என கனிமொழி கேட்க ‘தெரியாது’ என குரல் ஒலித்தது கூட்டத்தில் இருந்து.

ADVERTISEMENT

‘இதுதான் வீரபாண்டியார் என்பது. அவர் சேலம் மக்களுக்கு செய்த நன்மைகள் போல் யாரும் செய்ததில்லை. அவர் போட்ட பாலங்கள் தான் நமது போக்குவரத்துக்கு பயன்படுகிறது. அவர் கொண்டு வந்தது தான் ஆட்சியர் அலுவலகம், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை எல்லாமே. இப்போது உள்ள மந்திரி எடப்பாடி பழனிசாமியால் ஒரு பலனும் மக்களுக்கில்லை’ என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel