நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் சிவக்குமார் (ராமநாதபுரம்), ராஜீவ்காந்தி (திருவாடானை), முகம்மது கடாஃபி (முதுகுளத்தூர்), ஹேமலதா பாண்டியன் (பரமக்குடி) ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘தேர்தலில் ஜெயித்தால் கலைஞர் மீனவர்களுக்கு 5 லட்சம் வீடு கட்டித்தருவேன் என்கிறார். எல்லைதாண்டி மீன்பிடிப்பது பேராசை என்று சொன்ன கலைஞர் ஏன் கடந்த ஆட்சியிலேயே வீடுகளைக் கட்டித்தரவில்லை? மீத்தேன் எரிவாயு எடுப்பதை தடுப்பேன் என்கிறார் ஜெயலலிதா. மீத்தேன் எரிவாயு எடுப்பதை அப்புறம் தடுக்கலாம், முதலில் விவசாய நிலங்களை அழித்து ஹெலிபேட் போடுவதை அவர் நிறுத்தட்டும். கலைஞரும், ஜெயலலிதாவும் முன்னாள் முதல்வர்கள் இல்லை. முன்னாள் சாராய வியாபாரிகள். சேலையில் காசு முடிந்து வைத்து, சேமித்து வாழும் இந்தப் பிச்சைகாரர்கள் இட்ட பிச்சைதான் முதல்வர் பதவி’ என்றார்.
விவசாய நிலங்களை அழித்து ஹெலிபேட் போடுவதை நிறுத்தட்டும்- சீமான்
By Balaji
|
Published on 21 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








