வாய்பில்லாததால் ‘அதிமுக-பீ’ டீமில் வாசன் – ஈ.வி.கே.எஸ்

Published On:

| By Balaji

தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ளது. மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தமிழ் மாநில காங்கிரஸின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஜி.கே.வாசனைச் சந்தித்துக் கூட்டணியை உறுதிசெய்தனர். இந்தக்கூட்டணி பற்றி தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ‘மக்கள் நலக் கூட்டணி முழுமையான கோமாளிகளின் கூட்டணியாக மாறியிருக்கிறது. ஜி.கே.வாசன், அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று நினைத்தார். அதிமுகவில் அவரால் இணைய முடியவில்லை. அதனால், அதிமுகவின் பீ டீமில் இணைந்துள்ளார். இந்தக் கூட்டணியைப் பற்றி இதைத்தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை’ என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share