2021 சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ராயபுரம்: டி. ஜெயக்குமார் (அதிமுக) 36,645 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐட்ரீம் மூர்த்தி ஆர். (திமுக) 64,424 வாக்குகளைப் பெற்றார்.
அண்ணா நகர்: கோகுல இந்திரா (அதிமுக) 52,609 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.கே. மோகன் (திமுக) 80,054 வாக்குகளைப் பெற்றார்.
மதுரவாயல்: பி. பெஞ்சமின் (அதிமுக) 89,577 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணபதி கே. (திமுக) 1,21,298 வாக்குகளைப் பெற்றார்.
ஆலந்தூர்: தா.மோ. அன்பரசன் (திமுக) 1,16,785 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி. வளர்மதி (அதிமுக) 76,214 வாக்குகளைப் பெற்றார்.
போளூர்: அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) 97,732 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சேகரன் கே.வி. (திமுக) 88,007 வாக்குகளைப் பெற்றார்.
ஜோலார்பேட்டை: கே. சி. வீரமணி (அதிமுக) 88,399 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேவராஜி கே. (திமுக) 89,490 வாக்குகளைப் பெற்றார்.
வேப்பனஹள்ளி: கே. பி. முனுசாமி (அதிமுக) 94,104 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி. முருகன் (திமுக) 91,050 வாக்குகளைப் பெற்றார்.
பாலக்கோடு: கே. பி. அன்பழகன் (அதிமுக) 1,10,070 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முருகன் பி.கே. (திமுக) 81,970 வாக்குகளைப் பெற்றார்.
விழுப்புரம்: ஆர். லட்சுமணன் (திமுக) 1,02,271 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி. வெ. சண்முகம் (அதிமுக) 87,403 வாக்குகளைப் பெற்றார்.
கடலூர்: ஜி. ஐயப்பன் (திமுக) 84,563 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம். சி. சம்பத் (அதிமுக) 79,412 வாக்குகளைப் பெற்றார்.
எடப்பாடி: எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக) 1,63,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சம்பத்குமார் (திமுக) 69,352 வாக்குகளைப் பெற்றார்.
பவானி: கே. சி. கருப்பண்ணன் (அதிமுக) 1,00,915 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கே.பி. துரைராஜ் (திமுக) 78,392 வாக்குகளைப் பெற்றார்.
குமாரபாளையம்: பி. தங்கமணி (அதிமுக) 1,00,800 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம். வெங்கடாசலம் (திமுக) 69,154 வாக்குகளைப் பெற்றார்.
தொண்டாமுத்தூர்: எஸ். பி. வேலுமணி (அதிமுக) 1,24,225 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கார்த்திகேயா (திமுக) 82,595 வாக்குகளைப் பெற்றார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வி. ஜெயராமன் (அதிமுக) 80,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட டாக்டர் கே. வரதராஜன் (திமுக) 78,842 வாக்குகளைப் பெற்றார்.
உடுமலைப்பேட்டை: கே. ராதாகிருஷ்ணன் (அதிமுக) 96,893 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கே. தென்னரசு (காங்கிரஸ்) 74,998 வாக்குகளைப் பெற்றார்.
கரூர்: வி. செந்தில்பாலாஜி (திமுக) 1,01,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம். ஆர். விஜயபாஸ்கர் (அதிமுக) 89,309 வாக்குகளைப் பெற்றார்.
நன்னிலம்: ஆர். காமராஜ் (அதிமுக) 1,03,637 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ். ஜோதிராமன் (திமுக) 99,213 வாக்குகளைப் பெற்றார்.
வேதாரண்யம்: ஓ. எஸ். மணியன் (அதிமுக) 78,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.கே. வேதாரத்தினம் (திமுக) 66,390 வாக்குகளைப் பெற்றார்.
விராலிமலை: சி. விஜயபாஸ்கர் (அதிமுக) 1,02,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழனியப்பன் (திமுக) 78,581 வாக்குகளைப் பெற்றார்.
திண்டுக்கல்: திண்டுக்கல் சீனிவாசன் (அதிமுக) 90,595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாண்டி என். (சிபிஎம்) 72,848 வாக்குகளைப் பெற்றார்.
நத்தம்: நத்தம் ஆர். விஸ்வநாதன் (அதிமுக) 1,07,762 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம். ஏ. ஆண்டிஅம்பலம் (திமுக) 95,830 வாக்குகளைப் பெற்றார்.
மதுரை மேற்கு: செல்லூர் கே. ராஜூ (அதிமுக) 83,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சின்னம்மாள் (திமுக) 74,762 வாக்குகளைப் பெற்றார்.
திருமங்கலம்: ஆர். பி. உதயகுமார் (அதிமுக) 1,00,338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம். மணிமாறன் (திமுக) 86,251 வாக்குகளைப் பெற்றார்.
கோவில்பட்டி: கடம்பூர் ராஜூ (அதிமுக) 68,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட டிடிவி தினகரன் (அமமுக) 56,153 வாக்குகளைப் பெற்றார்.
ஸ்ரீவைகுண்டம்: ஊர்வசி அமிர்தராஜ் .எஸ் (காங்கிரஸ்) 76,843 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ். பி. சண்முகநாதன் (அதிமுக) 59,471 வாக்குகளைப் பெற்றார்.
கன்னியாகுமரி: தளவாய் சுந்தரம் (அதிமுக) 1,09,828 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட எஸ். ஆஸ்டின் (திமுக) 93,618 வாக்குகளைப் பெற்றார்.
