வலுவான பொருளாதார நிலையில் இந்தியா!

By Balaji

|

Published on 3 Feb 2018, 12:00 AM

இந்த நூற்றாண்டின் முதல் பாதியின் வலுவான பொருளாதார வளர்ச்சிகொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்று ஹவுஸ் ஆஃப் லோர்ட்ஸ் உறுப்பினரும், பொருளாதார நிபுணருமான ஜிம் ஓ நெய்ல் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் இந்திய – பிரிட்டிஷ் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு இணைந்து நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நெய்ல், “இந்த நூற்றாண்டின் முதல் 50 வருடங்களுக்கு உலகப் பொருளாதார நிலையில் இந்தியா வலுவான பங்கைக்கொண்டிருக்கும். பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பான நிலைகளை இந்தியா கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இந்தியாவின் மக்கள்தொகை உயர்வு வளர்ச்சி 12.5 சதவிகிதமாகவுள்ளது. இதனால் 2015-35 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவில் வேலைக்குச் செல்லும் தகுதியுடைய மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இது ஐரோப்பாவின் நான்கு பெரிய நாடுகளில் உள்ள மக்கள்தொகையைவிட அதிகமாகும். இதனால் இந்தியாவின் வேலைவாய்ப்பு தேவை அதிகரிக்கும். இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருக்கும். கடந்த ஆண்டுகளில் சீனா எந்த வளர்ச்சியைக் கண்டதோ அந்த வளர்ச்சியைவிடக் கூடுதலாக இந்தியா அடுத்த 20 ஆண்டுகளில் வளர்ச்சி காணும் என்று கருதுகிறேன். இந்த நிகழ்வு 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தால் என்ன கூறுவேன் என்று சொல்ல இயலுமா உங்களால்? இந்தியா ஒவ்வொரு மூன்று மாதங்களும் ஒரு நியூசிலாந்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பேன்” என்றார்.

நெய்ல் கோல்டுமேன் சேச்ஸ் அசெட் மேனேஜ்மென்ட் முன்னாள் தலைவராகவும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel