தமது ‘ராயன்’ (Raayan) படத்துக்கு 2 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது குறித்த விமர்சனங்களுக்கு நடிகர் தனுஷ் (Dhanush) ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
திருவள்ளூரில் இன்று ஜூலை 26-ந் தேதி நடைபெற்ற தமது பிறந்த நாள் நிகழ்ச்சியில் தனுஷ் பேசியதாவது: சமீபத்துல ராயன் படத்துக்கு தேசிய விருது கிடைச்சது. அந்த வருஷம், அந்த படத்தை விட தகுதியான பல படங்கள் நிச்சயமா வந்து இருக்கு. அந்த படங்களுடைய ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்துனாங்க. அதை நான் முழுசா மதிக்கிறேன்
என்னோட, ‘அது ஒரு கனா காலம்’ படம் ரிலீஸ் ஆச்சு, அப்ப நான் சின்ன பையன். நிச்சயமா இந்த படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொன்னாங்க. சின்ன பையன் அப்படிங்கறதுனால நானும் ரொம்ப ஆசையா காத்துட்டு இருந்தேன், ஆனா எனக்கு கிடைக்கல.
புதுப்பேட்டைக்கு கண்டிப்பா தேசிய விருது கிடைக்கும் அப்படின்னு எல்லாரும் சொன்னாங்க, நீங்களும் சொன்னீங்க…ஆனா எனக்கு கிடைக்கல.
அதுக்கப்புறம் மயக்கம் என்ன, மரியான், ராஞ்சனா, வடசென்னை.. எந்த படத்துக்குமே கிடைக்கலையே.. ஒரு சில விஷயங்களை நம்ம எவ்வளவுதான் முயற்சி பண்ணாலும் முடியாது..
இப்ப ராயனுக்கு விருது கிடைச்சுருக்கு.. இந்த படத்துக்கான எங்களுடைய உழைப்பு, உண்மையான உழைப்பு… ஒரு தமிழரா எனக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு. சிக்கல்கள் வந்தாலும், என்ன பிரச்சனை வந்தாலும், எந்த விஷயங்களை பண்ணாலும் ஜெயிக்கிற வரைக்கும் மோதி பார்ப்போம்.. இவ்வளவு பேரை ஒரு இடத்துல கூட முடியுது, அந்த ஒரு யூனிட்டிக்கு… அந்த யூனிட்டிக்கு ஒரு பவர் இருக்கு. அந்த பவரை நீங்க பாசிட்டிவான வழியில கொண்டு போங்க.. இவ்வாறு தனுஷ் பேசினார்.
