இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

Balebalu
முதலில் வந்தே மாதரம்,அடுத்து தேசிய கீதம் ,கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்து – ராஜ்பவன் உத்தரவு
தமிழக மக்கள் நவ் :
போற போக்கை பார்த்தா தமிழக அரசு
ஜனநாயகன் பாடலை பாடனும் னு எப்படியும் ஒரு உத்தரவு போடுவாங்க போல
அதுக்கு வந்தே மாதரமே பாடிட்டு போகலாம்

அண்ணாச்சி
அரசியல்….” துறவறம் “
ராமதாஸ் அறிவிப்பு….!!
# பேச்சு மாறக்கூடாது…!!!

படிக்காதவன்
பணத்தைபோல சொற்களையும் செலவு செய்யும் பக்குவம் இருந்துட்டா போதும்…

ArulrajArun
நீட் இருக்கக் கூடாது என்று சொல்வது நியாயம் இல்லை… காவல்துறையில் சேர வேண்டுமென்றால் இரு தேர்வுகள் உள்ளது… அதுபோல.மருத்துவர்களாக சேர்வதற்கு நீட் தேர்வு அவசியம் – சரத்குமார்
students now ; நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு இல்லன்னா நாங்க மாத்த வச்சிருவோம்

ச ப் பா ணி
Lunch time ல் சாப்பிடும் போது பக்கத்தில யாராவது மீன் குழம்பு கொண்டு வந்தா.. ஓசி கேக்கணும்னு
தோணுது
எனக்கும் மட்டும் தானா
Mannar & company
“ஜனநாயகன் படத்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்” – பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர்
ஆறு மாசத்துக்கு முன்னால ரிலீஸான படத்துக்கு Promotion,
ரிலீஸ்க்கு அப்புறம் Collection,
இப்போ Bonus-ஆ “மூளை சுறுசுறுப்பு”
அடுத்த Poster-ல “Doctor Recommended”னும் போட்டுடலாம் போல!

Sasikumar J
“அடையாள அட்டை எது வேணாலும் இருக்கட்டும்… வீட்டுல இருக்கோம்னு உலகத்துக்கே அடையாளம் காட்டுறது வாசல்ல நிற்குற பைக் தான்!
கோழியின் கிறுக்கல்!!
கல்வி அமைச்சரின் ராஜினாமா,
தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து இன்று வரையிலான, மோடி அரசின் முதல் தோல்வி என்றே கூறலாம்.

லாக் அப்
