VIDEO: சென்னை நீட் போராட்டம்.. மேலும் ஒரு நடிகை வெளியேற்றம்!

Published On:

| By Mathi

NEET Protests: Another Actress Walked Out in Chennai

சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் (Neet Protest) நடிகை சனம் ஷெட்டியை தொடர்ந்து நடிகையும் திமுக ஆதரவாளருமான ஜூலியும் வெளியேறினார்.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சி- CJP நடத்தி வரும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

நடிகை சனம் ஷெட்டி நேற்று, “நான் விஜய் ரசிகை.. ஜனநாயகன் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டுதான் வந்துள்ளேன். இந்த போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக சிலர் பயன்படுத்துகின்றனர்” என பேச பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் நடிகை சனம் ஷெட்டியிடம் இருந்து மைக் பற்றிக்கப்பட்டது. இதன் பின்னர் அங்கிருந்து சனம் ஷெட்டி வெளியேறினார்.

இந்த நிலையில் நடிகை ஜூலி மற்றும் திமுக ஆதரவாளர்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க சென்றனர். அவர்களில் சிலர் GenZ DMK உள்ளிட்ட அடையாளங்களுடன் சென்றனர். இதற்கு நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், “இந்த போராட்டம் அரசியல் சார்பு இல்லாமல் நடக்கிறது.. உங்கள் தூண்டுதலால்தான் இந்த போராட்டம நடைபெறுவதை போல நீங்கள் செயல்படலாமா?” எனவும் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

இதனையடுத்து நடிகை ஜூலி (Actress Julie) மற்றும் திமுக அடையாளங்களுடன் பங்கேற்றவர்கள் பாலன் இல்லத்தில் இருந்து வெளியேறினர்.

வீடியோ:

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share