மோடிமீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: மே 9 விசாரணை

Published On:

| By Balaji

கடந்த ஆண்டு, யோகா தினக் கொண்டாட்டத்தின்போது மோடி தேசியக்கொடி வர்ணத்தில் இருந்த துண்டைப் பயன்படுத்தியதாக மோடிமீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக, ஆசிஷ் சர்மா என்பவர் அளித்திருக்கும் மனுவில், “கடந்த ஜுன் 21ம் தேதி, இந்தியா கேட் பகுதியில் நடந்த யோகா தினக் கொண்டாட்டத்தில் மோடி, தேசியக்கொடியை கைக்குட்டைபோல பயன்படுத்தினார். அதேபோல் அமெரிக்கா செல்லும்போது தேசியக்கொடிமீது கையெழுத்திட்டு ஒபாமாவுக்குப் பரிசளித்தார். இது, விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, மோடிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை, டெல்லி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. வழக்கு விசாரணை வருகிற மே 9ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி சிக்தா சர்வாரியா தெரிவித்துள்ளார்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share