பூரண மதுவிலக்கு என சொல்லாதது ஏன்? – ஜெ-வுக்கு ஸ்டாலின் பதில்

By Balaji

|

Published on 19 Apr 2016, 12:00 AM

திமுக பொருளாளர் ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் அரியலூர் வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் (தனி) வேட்பாளர் சிவகாமி ஐஏஎஸ் (ஓய்வு), குன்னம் தொகுதி வேட்பாளர் தங்க துரைராஜ் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘ஜெயலலிதா சொல்லாததையும் செய்திருக்கிறேன் என்று பேசிவருகிறார். ஆமாம்; டாஸ்மாக் கடைகளைத் தெருவெல்லாம் திறப்போம் என்றோ, செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்போம் என்றோ அவர் சொல்லவில்லை. இதுபோன்ற காரியங்களை சொல்லாமல் செய்திருக்கிறார். கொடநாட்டு ராணி ஜெயலலிதாவைப் பார்த்து கேட்கிறேன்… செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தில் நடந்தது என்ன என்று முறையான விசாரணை நடத்த தைரியம் இருக்கிறதா? நேற்று கலைஞரைப் பார்த்து ஏன் தேர்தல் அறிக்கையில் ‘பூரண’ வார்த்தையை சேர்க்கவில்லை என்று கேட்டிருக்கிறார். தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு சட்டம் கொண்டுவரப்படும் என்றும், டாஸ்மாக் முழுவதும் கலைக்கப்படும் என்றும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளோம். அதற்கு அர்த்தமே பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்பதுதான். இதை புத்திசிகாமணியான ஜெயலலிதா புரிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel