புதுச்சேரி -திமுக – காங்கிரஸ்,4 தொகுதிகளுக்கு கடும் வாக்குவாதம்

By Balaji

|

Published on 15 Apr 2016, 12:00 AM

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் திமுக-வுக்கு 9 தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு 21 தொகுதி என்று ஒருவழியாக தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. திமுக-வுக்கு கொடுக்கபோகும் 9 தொகுதிகளில் உருளையான்பேட்டை தொகுதிக்கு சிவா, உப்பளம் தொகுதிக்கு ஹனிபால் கென்னடி, முத்தியால்பேட்டை தொகுதிக்கு எஸ்.பி.சிவக்குமார், காரைக்கால் தெற்கு தொகுதிக்கு நாஜிம், டி.ஆர்.பட்டினம் தொகுதிக்கு கீதா என ஐந்து தொகுதிகள் ஓகே! ஆனால் மீதியுள்ள நான்கு தொகுதிகளை திமுக போட்டியிட முடியாத தொகுதிகளை கொடுக்கிறது, காங்கிரஸ். எனவே தட்டாஞ்சாவடி, முதலியார்பேட்டை போன்ற தொகுதிகளை திமுக கேட்கிறது. நெட்டப்பாக்கம், மங்களம், மண்ணாடிபட்டு, உசுடு, தொகுதிகளை காங்கிரஸ் விட்டுக்கொடுக்காமல் விடாபிடியாக இழுத்துவருவது திமுக-வினரை முகம் சுளிக்க வைத்துள்ளதாம்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel