புதுச்சேரியில் திமுக-வுக்கு தனித்தொகுதி இல்லை

By Balaji

|

Published on 23 Apr 2016, 12:00 AM

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 21 தொகுதி, திமுக-வுக்கு 9 தொகுதி என்று உடன்பாடும் முடிந்தது. இந்நிலையில், திமுக போட்டியிடும் தொகுதிகளும், அதன் வேட்பாளர்களும் முத்தியால்பேட்டை – எஸ்.பி.சிவக்குமார், தட்டாஞ்சாவடி – பெல்லாரி கலியபெருமாள், மண்ணாடிபட்டு – ஏ.கே.குமார், உருளையான்பேட்டை – சிவா, உப்பளம் – ஹனிபால் கென்னடி, முதலியார்பேட்டை – லயன் சுரேஷ், மங்களம் – சன்.குமரவேல், காரைக்கால் தெற்கு – நாஜீம், நிரவி டி.ஆர்.பட்டினம் – கீதா ஆனந்த். இந்த 9 தொகுதிகளில் ஒரு தொகுதிகூட தனித்தொகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 5 தொகுதிகள், தனித்தொகுதிகள். அதில், ஒரு தனித் தொகுதியைக்கூட திமுக-வுக்கு காங்கிரஸ் விட்டுக் கொடுக்கவில்லை என்கின்றனர் கழக உடன்பிறப்புகள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel