Vபுதுச்சேரி மாநிலத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் பாஜக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். தற்போது, புதுச்சேரியில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த மாதம் பாஜக-வின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதுச்சேரி வந்தபோது கூட்டணி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ரங்கசாமி, திருப்பதி உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில் கூட்டணி குறித்து அறிவிக்காமல், சில நாட்களுக்குமுன்பு ரங்கசாமி தேர்தல் பணியைத் தொடங்கினார். கூட்டணிக்காக காத்திருந்த புதுச்சேரி மாநில பாஜக முதற்கட்டமாக அந்த மாநிலத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் தொகுதியும் இருக்கிறது. அதனால், இனி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லாமல் முடிவுக்கு வந்துள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி முறிந்தது
By Balaji
|
Published on 15 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








