பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, பாஜக-வின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 21ல் வெளியிடப்படுகிறது. இந்த தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளியிடுகிறார். தமிழகத்தில் உள்ள இரு திராவிடக் கட்சிகளாலும் மது மற்றும் ஊழலை ஒழிக்க முடியாது. காரணம், இரு கட்சிகளுமே மது ஆலைகளை வைத்துள்ளனர். அதேபோல இரு கட்சிகளும் ஊழலில் திளைத்துள்ளனர்” என்றார்.,”
பாஜக தேர்தல் அறிக்கை ஏப் 21ல் வெளியீடு: தமிழிசை
By Balaji
|
Published on 20 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








