டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தின் போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷி, சக்திமான் என்ற காவல்துறை அணிவகுப்பில் கலந்துகொண்ட குதிரையைத் தாக்கினார். இதில் குதிரையின் இடது கால் முறிவடைந்து, பின்னர் அறுவைச் சிகிச்சையில் நீக்கப்பட்டது. அதன்பின் அந்தக் குதிரைக்கு செயற்கைக்கால் பொருத்தப்பட்டது. இச்செயலுக்கு பாஜக அமைச்சர் மேனகா காந்தி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதன் பின்பு, கணேஷ் ஜோஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதாகி, பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் செயற்கைக் காலோடு மீண்டும் நடக்கப்பழக ஆரம்பித்த 13 வயதான சக்திமான் குதிரை, இன்று உயிர் இழந்துள்ளது.
பாஜக எம்.எல்.ஏ. தாக்கிய சக்திமான் குதிரை உயிரிழப்பு
By Balaji
|
Published on 20 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








