திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஸ்டாலின் இன்று இரவு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் உள்ள விடுதியில் தங்கிவிட்டு நாளை காலை, தனது மனைவி துர்காவுடன், ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரைச் சந்தித்து ஆசிபெறுகிறார். அதன்பின்பு, அப்பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்குகிறார். திமுக ஆட்சி மீண்டும் அமைவதற்காக ஸ்டாலினின் துணைவியார் துர்கா பல்வேறு கோவில்களிலும் வலம்வந்து பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியின் ஜாதகப்படி, அவர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பார் என்கிறார்கள் பல்வேறு ஜோதிடர்கள்.
நாளை பங்காரு அடிகளாரைச் சந்திக்கிறார் ஸ்டாலின்
By Balaji
|
Published on 21 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








