நிலக்கோட்டைத் தொகுதி திமுக வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து வத்தலக்குண்டு பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, ‘கடந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா கொடநாட்டில், சிறுதாவூரில், போயஸ் கார்டனில் ஓய்வெடுத்து வந்தார். இப்போதுதான் ஓட்டுக்காக வெளியில் வந்துள்ளார். ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கவேண்டும். நமக்கு நாமே பயணத்தின்போது 234 தொகுதிகளுக்கும் நான் சென்று வந்தேன். உங்கள் ஊருக்கும் வந்தேன். நான் என்று சொல்வதைவிட நாம் என்றுதான் சொல்லவேண்டும். அதுதான் கலைஞரின் பழக்கம். நமக்கு நாமே பயணத்தை சிலர் ஷூட்டிங் என கிண்டல் செய்தனர். அது ஷூட்டிங் இல்லை; மக்களுடனான மீட்டிங். திமுக வெளியிட்டுள்ளது வெறும் தேர்தல் அறிக்கை அல்ல; மக்களின் பொக்கிஷம்’ என்றார். தொடர்ந்து ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமியை ஆதரித்து செம்பட்டியில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், “ தொடர்ந்து 7 முறையாக ஐ.பெரியசாமி இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றால் அது அவருடைய நம்பிக்கையின் அடையாளம். கடந்த 2011 தேர்தலில் திமுக வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐ.பி தான். அவரை எதிர்த்து நிற்கும் நத்தம் விஸ்வநாதந்தான் இப்போது மதுவிலக்கு ஆயத்துறை, மின்சாரம் இரண்டிற்கும் அமைச்சர். இன்று அந்த இரண்டு துறைகளும் இருக்கும் நிலையை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மதுவிலக்கைப் பற்றி பேச திமுகவுக்கு யோக்கியதை இல்லை என்று சொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு யோக்கியதை இல்லை” என்றார்.
‘நமக்கு நாமே’ ஷூட்டிங் அல்ல; மீட்டிங் – ஸ்டாலின்
By Balaji
|
Published on 16 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








