இன்று, திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தபின், செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “திமுக தலைவர் கருணாநிதி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். வரும் 18ம் தேதி அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தி.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். அதற்கு கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு சாத்தியமா என்று கேட்கிறார்கள். சாத்தியப்படாததை சாத்தியப்படுத்துபவர்தான் கருணாநிதி. தேவைப்பட்டால் திமுக-வுக்கு பிரச்சாரம் செய்வேன்” என்றார்.
தேவைப்பட்டால் திமுக-வுக்கு பிரச்சாரம் செய்வேன்: கி.வீரமணி
By Balaji
|
Published on 15 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








