திமுக பொருளாளர் ஸ்டாலின், மதுரையில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதுரையில் திமுக போட்டியிடும் 8 தொகுதிகள், காங்கிரஸ் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் பெ.மூர்த்தியை ஆதரித்து ஒத்தக்கடை பகுதியிலும், மேலூர் திமுக வேட்பாளர் அ.பா.ரகுபதியை ஆதரித்து மேலூரிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ‘திமுக-வின் தேர்தல் அறிக்கையை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘நமக்கு நாமே’ பயணத்தின்போது நான் பல்வேறு மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்தேன். அப்போது கல்விக்கடனைக் கட்ட சிரமப்பட்டு, எல்லோரும் வட்டிகட்டி வருவதாக என்னிடம் சொன்னார்கள். அதன்பிறகு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினரோடுச்சேர்ந்து நான், தலைவர் கலைஞரைச் சந்தித்தேன். அப்போது, கல்விக்கடன் வட்டியிலிருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்ற யோசனையைச் சொன்னேன். ஆனால், கலைஞரோ கல்விக்கடனை முழுவதுமாக ரத்து செய்துவிடலாம் என்று என்னிடம் தெரிவித்தார். அதேபோல் பல்வேறுத் திட்டங்களைத் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளோம். 501 தேர்தல் வாக்குறுதிகள் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. 2006 தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால், 2016 தேர்தல் அறிக்கை சூப்பர் நாயகன் என்கிற அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது’ என்றார். வழக்கமான அடுக்குமொழி பாணியில் இல்லாமல், கலந்துரையாடலில் பேசுவதுபோல் ஸ்டாலின் அங்கு பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் அறிக்கையில் 501 வாக்குறுதிகள்: ஸ்டாலின்
By Balaji
|
Published on 15 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








