தேயிலை ஏற்றுமதியில் இந்தியா சாதனை!

By Balaji

|

Published on 8 Feb 2018, 12:00 AM

2017ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 240.7 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை ஏற்றுமதி செய்து சாதனைப் படைத்துள்ளது. இந்த ஏற்றுமதி அளவானது முந்தைய 36 ஆண்டுகளில் இந்தியா செய்துள்ள அதிகபட்ச ஏற்றுமதியாகும் என்று தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

36 ஆண்டுகளுக்கு முன்பு 1981ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 241.25 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை ஏற்றுமதி செய்ததே இதுவரையில் அதிகபட்ச ஏற்றுமதி அளவாக இருந்தது. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017இல் 18.23 மில்லியன் கிலோ கூடுதலான தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது. இது 8.20 சதவிகிதம் உயர்வாகும். மதிப்பு அடிப்படையில் 2017ஆம் ஆண்டில் 5.90 சதவிகித உயர்வுடன் ரூ.4,731 கோடிக்குத் தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது.

ADVERTISEMENT

வடஇந்திய மாநிலங்களின் ஏற்றுமதி 148.41 மில்லியன் கிலோவாகப் பதிவாகியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் தேயிலை ஏற்றுமதி 92.27 மில்லியன் கிலோவாக இருந்துள்ளது. இந்தியாவிலிருந்து எகிப்து நாட்டுக்கு அதிகபட்சமாக 6.16 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஈரானுக்கு 4.15 மில்லியன் கிலோ, சீனாவுக்கு 2.80 மில்லியன் கிலோ என்ற அளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel