தேமுதிக வேட்பாளர் பட்டியல் – பிரேமலதா, சுதீஷ் இல்லை

By Balaji

|

Published on 18 Apr 2016, 12:00 AM

தேமுதிக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை 5 கட்டமாக 93 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. மீதமுள்ள 11 தொகுதிகளுக்கான 6 வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன் விவரம்:

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டை – விஜயகாந்த்

விழுப்புரம் – திரு.எல்.வெங்கடேசன் B.A., எம்.எல்.ஏ

ADVERTISEMENT

ரிஷிவந்தியம் – திரு.வி.ஜெ.பி.வின்சென்ட் ஜெயராஜ்

சங்கராபுரம் – திரு.ஆர்.கோவிந்தன்

ADVERTISEMENT

மேட்டூர் – திரு.ஆர்.பூபதி

உடுமலைபேட்டை – திரு.எஸ்.கணேஷ்குமார்

ஆத்தூர் (திண்டுக்கல்) – திரு.ம.பாக்கிய செல்வராஜ்

ஒரத்தநாடு – திரு.Dr.ப.இராமநாதன் BDS.,

விராலிமலை – திரு.ஏ.ஆர்.கார்த்திகேயன்

மன்னார்குடி – திரு.ஏ.முருகையன்பாபு

திண்டிவனம் (தனி) – திரு.மு.உதயகுமார் BBA

பட்டியலில் பிரேமலதா, சுதீஷ் பெயர் இடம் பெறவில்லை. திமுகவை விமர்சிக்கும் நேரங்களில் ‘தேமுதிகவும் குடும்ப அரசியலில் தான் ஈடுபடுகிறது’ என்ற விமர்சனம் எழுகிறது. இந்த முறை ‘மாற்று அரசியல்’ என்ற கோஷத்துடன் மக்கள் நலக் கூட்டணியோடு கூட்டணி வைத்துள்ளது.இந்த நிலையில், பிரேமலாதவையும், சுதீஷையும் வேட்பாளர்களாக அறிவித்தால் மேலும் பின்னடவைச் சந்திக்க நேரிடும். அத்துடன் ‘பிரேமலதா கட்டுப்பாட்டில் கட்சி இல்லை’ என்று வெளியில் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் விஜயகாந்திற்கு உள்ளது. இவைகளை கணக்கில் கொண்டுதான் பிரேமலதாவிற்கும், சுதீஷிற்கும் இடம் கொடுக்கப்படவில்லை.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel