நாகை மாவட்டம், சீர்காழி தொகுதிக்கு திமுக வேட்பாளராக, மகளிர் அணி பொறுப்பாளர் கனிமொழி ஆதரவுபெற்ற கிள்ளை ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர், சிறு வயதிலிருந்தே திமுக-வில் செயல்பட்டு வருகிறார். எந்தநிலையிலும் சோர்ந்துபோகாமல் தன்னம்பிக்கையுடன் கட்சிப் பணி செய்பவர் எனப் பெயர்பெற்றவர். இந்நிலையில், இப்படிப்பட்ட ரவிக்கு எதிராக உள்ளூர் தொகுதி திமுக-வினர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதையெல்லாம் சரிசெய்துவிட்டு, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டயாரைச் சந்தித்து ஆதரவு கேட்க, அவரும் ரவிச்சந்திரனுக்கு மட்டும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். சீர்காழி தொகுதியில் சுமார் 20 ஆயிரம் வாண்டையார் சமூக வாக்குகள் இருப்பதால் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக திமுக-வினர் நம்பிக்கையில் உள்ளனர்.
திமுக வேட்பாளருக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆதரவு
By Balaji
|
Published on 23 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








