திமுக நிர்வாகிகளின் மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி

By Balaji

|

Published on 18 Apr 2016, 12:00 AM

திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி சென்னையில் இன்று காலை அளித்துள்ள பேட்டியில், “அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. பா.ஜ.க மாற்று அணியாக உருவாகும் என்பது பகல் கனவு. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்றார். அ.தி.மு.க., வேட்பாளர் மாற்றப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வளவு தெளிவாக அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வேட்பாளர் மாற்றத்திற்கு எதிர்க்கட்சிகள் மீதான பயமே காரணம். என்றார். மதியம் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க., நிர்வாகிகள் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும். பொன்முடி விடுதலை மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel