திமுக இரண்டாம் இடத்துக்குக்கூட வரமுடியாது : ஜெ.

By Balaji

|

Published on 23 Apr 2016, 12:00 AM

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, தமிழகத்தில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்துக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது. உர மானியத்தை உயர்த்தியது திமுக அரசுதான். தமிழகத்தில் இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது என்று திமுக-வினருக்கு நன்றாகத் தெரியும். 2ம் இடத்துக்குக்கூட வரமுடியாது என்ற பயம் திமுக-வினரை ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான், பொய் விளம்பரப் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். அந்த விளம்பரங்களால் மக்கள் ஏமாறப் போவதில்லை. ஏமாறப்போவது திமுக-தான். ஈழப்பிரச்னையில் திமுக நாடகமாடுகிறது. இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டதை கருணாநிதி தடுக்கவில்லை. இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவியது திமுக-வுக்குத் தெரியும். ஆனால், திரு.கருணாநிதி அதைத் தடுக்கவில்லை. திமுக காங்கிரஸுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறவேண்டும் என நான் திரு.கருணாநிதியை வலியுறுத்தினேன். ஆனால், அதை அவர் கேட்கவில்லை. ஈழப் பிரச்னை விவகாரத்தில் பல நாடகங்களை நடத்திக்காட்டினார். போர் நிறுத்தம்குறித்து அவர் அளித்த தவறான தகவலை நம்பி வெளியில் வந்து இலங்கைத் தமிழர்கள் செத்தார்கள். 2013ல் காங்கிரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற திரு.கருணாநிதி, ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்று பேசினார். காங்கிரஸ் கட்சியுடன் இனி உறவே இல்லை என்று சொல்லிவிட்டு, தன்னுடைய மகள் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று காங்கிரஸுடன் மீண்டும் கூட்டு வைத்துக்கொண்டார். இப்படி, கபடநாடகம் ஆடும் திமுக-வை நம்புவதற்கு தமிழக மக்கள் ஏமாளிகள் இல்லை. பூரண மதுவிலக்கு என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திமுக சொல்லவில்லை. தனியார்மூலம் மதுவிலக்கு கொண்டுவர திமுக திட்டமிடுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும்” என்றார்.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel