திமுகவில் ‘தனி’ தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்

By Balaji

|

Published on 19 Apr 2016, 12:00 AM

காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? என்பது குறித்து டில்லியில் காங்கிரஸ் வொர்க்கிங் கமிட்டி கூடி ஆலோசித்தது. ‘தனி தொகுதிகளை ஏன் அதிகம் வாங்கவில்லை? இன்னும் இரண்டு தொகுதிகளை திமுக வில் கேட்டு வாங்க முடியுமா?’ என்று ஆலோசித்துள்ளனர். முசிறி தொகுதி வேட்பாளராக திருச்சி வேலுச்சாமியை அறிவிப்பது தொடர்பாக நீண்ட ஆலோசனை நடந்தது. அவர் புலிகளின் தீவிர ஆதரவாளர். கடந்த முறை திமுக- காங்கிரஸ் தோற்பதற்கு காரணம் ‘ஈழப் படுகொலை’ என்ற பிரச்சாரம் தான். அதனால் இப்பொழுது வேலுச்சாமியை அறிவித்தால் அது நமக்கு சாதகமாக இருக்குமா? என்பது அரசியல்ரீதியான கேள்வியாக இருக்கிறது. எனவே சோனியாவே முசிறி தொகுதி வேட்பாளரை முடிவு செய்யட்டும் என்று பட்டியலை சோனியாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இன்று மாலைக்குள் வேட்பாளர் பட்டியல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel