கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்காக நான், மக்களால் நான் என்று கூறும் வார்த்தை ஜாலங்களை எல்லாம் மக்கள் நம்பமாட்டார்கள். சொன்னதைச் செய்தேன் சொல்லாததையும் செய்வேன் என்று கூறுகிறார். 110 விதியின்கீழ் சொன்னதைச் செய்தாலே போதும். சொன்னதையே செய்யாதவர், சொல்லாததை எப்படி செய்வார்?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும், ‘கடந்த 5 ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராகக் கிடைத்த வாய்ப்பை சரியாக செய்ய முடியாத விஜயகாந்த் எப்படி முதலமைச்சராக முடியும். எதிர்க்கட்சி சரியாகச் செயல்படாததால், முதலமைச்சரும் செயல்படவில்லை. தமிழக தேர்தலில் இனிமேல் வார்த்தை ஜாலங்களைக் காட்டி வெற்றிபெற முடியாது. செயல்களினால் மட்டுமே வெற்றி பெற முடியும்’ என்று இல.கணேசன் கூறினார்.
ஜெயலலிதா சொன்னதைச் செய்தாலே போதும்: இல.கணேசன்
By Balaji
|
Published on 18 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








