ஜெயலலிதாவை தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள்: வைகோ

By Balaji

|

Published on 23 Apr 2016, 12:00 AM

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று அறந்தாங்கி தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதனை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மனிதாபிமானம் அற்றவராக ஜெயலலிதா உள்ளார். மதுக்கடைகளை அதிகப்படுத்தி தமிழ்நாட்டை சீரழித்துவிட்டார். மனிதாபிமானம் கொஞ்சம்கூட இல்லாத அவர், பிரச்சாரக் கூட்டத்துக்கு கூட்டத்தைக் காண்பிப்பதற்காக ஆட்களை அழைத்துவந்து வதைத்ததில் தொண்டர்கள் பலியாகியுள்ளனர். தனது பேச்சைக் கேட்கவேண்டும் எனக் கட்டாயப்படுத்தி, வெயிலில் அமரவைத்து தொண்டர்களை சாகடித்த ஜெயலலிதாவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் நிச்சயமாகத் தண்டிப்பார்கள்” எனப் பேசினார்.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel