ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த, சில தினங்களுக்கு முன்புதான் ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே தனது வாதத்தை முன்வைத்தார். அவர் தெரிவித்ததாவது: ஜெயலலிதாவின் அதிகார மையமாக சசிகலா இருந்தார் என்று அரசுத் தரப்பு கூறியதில் உண்மையில்லை. அரசுத் தரப்பின் வாதத்தில் நிறைய குறைபாடு உள்ளது. சசிகலா யாருடைய பினாமியாகவும் செயல்படவில்லை. ஜெயலலிதா மற்றும் சசிகலா இடையே பணப் பரிமாற்றம் நடைபெற்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெளிவாகக் கூறிவிட்டது. ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் இருந்தார்கள் என்பதற்காக சொத்துக் குவித்ததாகக் கருதமுடியாது” என்றார். இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.,”
சசிகலா பினாமி இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்
By Balaji
|
Published on 19 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








