குழந்தையாக இருந்த போதே இந்தியா மீது வெறுப்பு-ஹெட்லி

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டேவிட் ஹெட்லியிடம் மூன்றாவது நாளாக இன்றும் காணொளிக் காட்சி மூலமாக குறுக்கு விசாரணை நடைபெற்றது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் உஜ்ஜவால் நிகாம் மற்றும் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வஹாப் கானின் வழக்கறிஞர் அபு ஜுண்டால் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்திவருகின்றனர். நேற்றைய விசாரணையின்போது, மறைந்த சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேவைக் கொல்ல முயற்சித்ததாகக் கூறியிருந்தார். இன்றைய விசாரணையில், “சிவசேனாவுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடுசெய்ய முயற்சி செய்தேன். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பால்தாக்கரேவை அமெரிக்கா அழைக்க நினைத்தேன். ஆனால், பால்தாக்கரேவை சந்தித்ததோ, பேசியதோ இல்லை. என் நண்பர் ராஜாராம் ரகி தான், ‘பால்தாக்கரே வயதானவர், அவருக்கு உடல்நிலை சரியில்லை’ என்று தெரிவித்தார். எனவே அவரை நான் அழைக்கவில்லை” என்றார். மேலும், “1971ம் ஆண்டு, நான் படித்த பள்ளிமீது இந்திய விமானங்கள் குண்டுவீசி தகர்த்தனர். அதற்குப் பழிதீர்க்கவே லஷ்கர் ஈ தொய்பா-வில் சேர்ந்தேன். எனக்கு குழந்தையாக இருந்தபோதே இந்தியாமீது வெறுப்பு இருந்தது. இந்தியர்கள் அதிகபட்ச இழப்பைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel