நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் சிட்டிங் எம்எல்ஏ-வாக இருப்பவர் திமுக-வைச் சேர்ந்த ராமச்சந்திரன். அமைச்சராக இருந்தவர். அவருக்கு இந்தமுறை டிக்கெட் வழங்கப்படவில்லை. மாவட்டச் செயலாளர் முபாரக்கை குன்னூர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது கட்சித் தலைமை. இதனால், ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் கொதிப்பில் உள்ளனர். ராமச்சந்திரனும் மனம் நொந்து காணப்படுகிறார். ‘நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தொகுதியில் படகர் இன மக்கள் அதிக அளவில் உள்ளனர். இங்கு மட்டுமே படகர்கள் போட்டியிட முடியும். இந்தமுறை எனக்கு சீட் தராததால், இந்தத் தொகுதியில் திமுக ரிஸ்க் எடுத்துள்ளது. குன்னூரில் இந்த முறை திமுக தோற்கும்’ என சாபமிட்டுள்ளார், தொகுதி மறுக்கப்பட்டுள்ள ராமச்சந்திரன்.
குன்னூரில் திமுக தோற்கும்: திமுக எம்எல்ஏ சாபம்
By Balaji
|
Published on 17 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








