கிச்சன் கீர்த்தனா: தேங்காய் பர்பி!

By Balaji

|

Published on 2 Feb 2018, 12:00 AM

0

மைக்ரோவேவ் உபயோகித்து மூன்றரை நிமிடங்களில் ருசியான தேங்காய் பர்பி செய்யலாம். இதோ… சனிக்கிழமை ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.

ADVERTISEMENT

**தேவையான பொருள்கள்:**

தேங்காய்த் துருவல் – 1 கப்

ADVERTISEMENT

ஏலக்காய் – 3

முந்திரிப் பருப்பு – 8

ADVERTISEMENT

சர்க்கரை – 1 கப்

பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை

நெய் – 1 டீஸ்பூன்

**செய்முறை:**

* தேங்காயை நைசாகத் துருவிக்கொள்ளவும்.

* ஏலக்காயையும், பச்சைக் கற்பூரத்தையும் சிறிது சர்க்கரையுடன் சேர்த்து, நைசாகப் பொடித்துக்கொள்ளவும்.

* முந்திரிப் பருப்புகளைச் சிறு துண்டுகளாக ஒடித்துக்கொள்ளவும்.

* எல்லாப் பொருள்களையும் நன்றாகக் கலந்து ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் மூடாமல் வைக்கவும்.

* மூன்றரை நிமிடங்கள் ‘மைக்ரோ ஹை’யில் வைக்கவும். நடுவில் ஒருமுறை லேசாகக் கிளறிக் கொடுக்கவும்.

* மைக்ரோவேவிலிருந்து எடுத்த கையோடு, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமமாகப் பரப்பவும்.

* சிறிது சூடு ஆறத் தொடங்கியதும், நெய் தடவிய கத்தியால் மூன்று செமீ சதுரக் கட்டிகளாக வெட்டவும்.

மூன்றரை நிமிடங்களில் தேங்காய் பர்பி தயார்.

**கீர்த்தனா சிந்தனைகள்:**

‘Sorry’ என்பது மட்டுமல்ல… ‘சாப்பிட்டியா?’ என்பதும் ஒருவகையில் சமாதான வார்த்தைதான்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel