கிச்சன் கீர்த்தனா – கொத்தவரங்காய் பொரித்த கூட்டு

By Balaji

|

Published on 20 Dec 2017, 12:00 AM

சிலரைப் பார்த்தால் வயதுக்கும் தோற்றத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால், சிலர் எவ்வளவுதான் மேக்கப் போட்டாலும் வயதானதை தோல் சுருக்கங்கள் காட்டிக்கொடுத்துவிடும். அந்தத் தோல் சுருக்கத்தைக் குறைக்கும் சத்துகள் கொத்தவரங்காயில் அதிகம் உள்ளதாக தோழி வசந்தா தெரிவித்தார். கூடவே சுவையான வித்தியாசமான கொத்தவரங்காய் பொரித்த கூட்டு ஒன்றையும் கூறினார். நாமும் செய்வோமா?

**தேவையானவை:** கொத்தவரங்காய் – 150 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

ADVERTISEMENT

**செய்முறை:** கொத்தவரங்காயில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வேகவைத்த கொத்தவரங்காயுடன் அரைத்த விழுது சேர்த்து, கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். சுவையான கொத்தவரங்காய் பொரித்த கூட்டு தயார்.

**கீர்த்தனா சிந்தனைகள்:** கலர் டிவி இல்லை, மிக்சி இல்லை, கிரைண்டர் இல்லை, குக்கர் இல்லை, 6000 இல்லை, தெருவில் குத்து பாட்டு நடனம் இல்லை, சினிமா நடிகைகள் இல்லை, ஆபாசப் பிரசாரம் இல்லை, வளர்மதிகள் இல்லை, சரஸ்வதிகள் இல்லை, தள்ளுவண்டி தலைவன் இல்லை, கரம் கோக்க குஷ்பு இல்லை, கை கொடுக்க நக்மா இல்லை… மற்ற தொகுதிகள் என்ன தக்காளித் தொக்கா?

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel