கனிமொழி தேர்தல் பிரச்சாரப் பயண தேதி அறிவிப்பு

By Balaji

|

Published on 16 Apr 2016, 12:00 AM

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வருகின்ற 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தனது முதற்கட்ட பிரச்சாரச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் தனது பிரச்சாரத்தில் ஈடுபடுவார். 18-ம் தேதி சேலம் மாவட்டத்திலும், 19-ம் தேதி நாமக்கல் மாவட்டத்திலும், 20-ம் தேதி ஈரோடு மாவட்டத்திலும், 21-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திலும் மற்றும் 22-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்தக் கூட்டங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்குசேகரிக்க உள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel