ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்எல்ஏ-வும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்திருப்பவருமான பொண்ணுபாண்டி கலந்துகொண்டார். அதிமுக-வில் இணைந்தபிறகு முதன்முதலாக அதிமுக மேடையில் உரையாற்றிய பொண்ணுபாண்டி, அதிமுக கோடிக்கணக்கான உறுப்பினர்கள்கொண்ட ஒரு பேரியக்கம். இதில் மாற்றுக் கட்சியிலிருந்து ஒரு எம்எல்ஏ-வான நான் வந்து சேர்ந்ததால், அதிமுக-வுக்குப் பெரிய பலம் ஒன்றுமில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளார். முழு நேரமும் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் வாழ்ந்துவருகிறார். அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே நான் அதிமுக-வில் இணைந்துள்ளேன். அதிமுக-வுக்கு நான் என்றும் விசுவாசமாக இருப்பேன். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக வியூகம் வகுத்துச் செயல்படுவேன். ஏராளமான மாற்றுக் கட்சித் தொண்டர்கள் அதிமுக-வில் இணைய விருப்பம் தெரிவித்து வந்துள்ளார்கள். எந்த மேடையில் எப்படிப் பேசவேண்டும் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் கூறுகிறார்களோ, அதன்படி அதிமுக-வுக்கு ஏற்றவாறு என் நடவடிக்கையை மாற்றிக்கொள்வேன்” என்றார்.,”
ஈர்ப்பால் இணைந்துள்ளேன்- அதிமுக வந்த பொன்னுபாண்டி
By Balaji
|
Published on 20 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








