இந்தியாவில் உள்ள தேசியக் கட்சிகளின் வருமானம் குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின்படி, இந்தியாவில் பணக்காரக் கட்சி பாஜக-தான் என்று தெரியவந்துள்ளது. பாஜக-கடந்த நிதியாண்டில் 970.43 கோடி ரூபாயை நிதி திரட்டியுள்ளது.இது இந்தியாவில் உள்ள 6 தேசியக் கட்சிகளின் மொத்த வருமானத்தில் 76 சதவிகிதம் ஆகும். ஆச்சரியப்படத்தக்கவகையில் பாஜக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் வருமானம் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் வருமானம் ரூ.45.04 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு வருமானத்தை விட 67.31 சதவிகிதம் அதிகமாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானமாக ரூ.1.84 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தேசியக் கட்சிகளாக இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள வருமானத்தில் பெரும்பாலானவை அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சி வருமானத்தைச் சொல்லவில்லை. ஒருவேளை, காங்கிரஸின் வருமானம் தெரியவந்திருந்தால், காங்கிரஸ் முதலிடத்துக்கு வந்திருக்கக்கூடும்.
இந்தியாவில் கோடீஸ்வரக் கட்சி பாஜக!
By Balaji
|
Published on 20 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








