ஆன்மிகத் தலைவர்களை சந்திக்கும் திமுக வேட்பாளர்

By Balaji

|

Published on 16 Apr 2016, 12:00 AM

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளர், மனோ தங்கராஜ் முதற்கட்டமாகத் தொகுதியில் உள்ள பெரும்தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, தக்கலையில் உள்ள பீர் முகமதப்பா தர்காவில் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அடுத்து சாமிதோப்பு ஐயா பாலபிரஜாதிபதி அடிகளார் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். தன்னுடனே வரும் அவைத் தலைவர் பப்புசன், தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் ஜான் பிரைட், திருவட்டார் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், தக்கலை (வடக்கு) ஒன்றியச் செயலாளர் அருளானந்த ஜார்ஜ் உள்ளிட்ட நிர்வாகிகளிடம்,

‘இங்கே ஒருத்தரையும் விட்டுவிடக் கூடாது. எல்லா மதத் தலைவர்களையும் சந்திச்சு ஆதரவு கேட்கணும். அப்பதான் இங்கே வெல்ல முடியும்’ என்கிறார் மனோ தங்கராஜ்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel