தென் மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவும், இதற்காக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அருப்புகோட்டை செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அருப்புக் கோட்டைக்கு செல்கிறார். அங்கு அவர் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சிவகங்கை, பரமக்குடி (தனி), மானாமதுரை (தனி), முதுகுளத்தூர், ராமநாத புரம், கோவில்பட்டி, விளாத்திக்குளம் ஆகிய 14 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான அ.தி. மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்திற்காக அருப்புக்கோட்டை– தூத்துக்குடி சாலையில் உள்ள காந்தி நகரில் 6 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
அருப்புக்கோட்டையில் இன்று ஜெயலலிதா பிரச்சாரம்
By Balaji
|
Published on 15 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








