அன்பான சர்வாதிகார ஆட்சியை கொண்டு வருவோம் : சீமான்

By Balaji

|

Published on 15 Apr 2016, 12:00 AM

நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மசக்காளி பாளையம் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்போம் என்கிறார் கலைஞர். கச்சத்தீவை கொடுத்தது, கொடுத்தது தான் என்கிறது காங்கிரஸ். ஆனால் இரண்டு பேரும் தேர்தலில் கூட்டு வைத்துள்ளனர். எல்லாம் ஏமாற்று பேச்சு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னால் தான் மதுக்கடைகளை மூட முடியும் என்கிறார் கலைஞர். ஆம் அவர் தானே அதனை திறந்து வைத்தது. ஆகவே அவரால் தான் மூட முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்து விட்டு நுங்கு, இளநீர், பனம்பால், தென்னம்பாலை கொண்டு வருவோம். பசி என்ற சொல்லை தமிழர் அகராதியில் இருந்து ஒழிப்போம். நாங்கள் வெற்றி பெற்றால் தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியை கொண்டு வருவோம்” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel