அதிமுக வேட்பாளர் பட்டியல் மாற்றம்

By Balaji

|

Published on 18 Apr 2016, 12:00 AM

அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை 6 முறை அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மேலும் 8 பேரை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதன்படி, திருச்சி கிழக்கு தொகுதியில், தமிழரசிக்கு பதிலாக வெல்லமண்டி நடராஜன், அரக்கோணத்தில் கோ.சி.மணிவண்ணனுக்கு பதிலாக சு.ரவி, பாப்பிரெட்டிபட்டியில் குப்புசாமிக்கு பதிலாக பி.பழனியப்பன், ஈரோடு மேற்கு தொகுதியில் வரதராஜனுக்கு பதிலாக கே.வி.ராமலிங்கம், கோவில்பட்டியில் ராமனுஜன் கணேஷுக்கு பதிலாக கடம்பூர் ராஜூ, சங்கராபுரம் தொகுதியில் ராஜசேகருக்கு பதிலாக ப.மோகன், ஸ்ரீவைகுண்டத்தில் புவனேஸ்வரனுக்கு பதிலாக எஸ்.பி.சண்முகநாதன், பாளையங்கோட்டையில் தமிழ்மகன் உசேனுக்கு பதிலாக எஸ்.கே.ஏ.ஹைதர் அலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel