அதிமுக-வுக்கு தேர்தல் ஆணையம் உடந்தை: ஸ்டாலின்

By Balaji

|

Published on 23 Apr 2016, 12:00 AM

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இன்று தனது இரண்டாம் கட்ட பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். பொன்னேரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் கே.பரிமளத்தை ஆதரித்து இன்று மாலை ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களை விலைக்கு வாங்கும் அதிமுக முயற்சிக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது. கரூர் அன்புநாதன் வீட்டில் ரூ.5 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல். தமிழக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஜெயலலிதா அலுவலகத்தில் என்ன வேலை? மக்களுக்கு பணம் கொடுக்க அதிமுக-வினர் முயன்றால், நமது கழகத்தினர் தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் தரவேண்டும். ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதற்கு காவல் துறையினர், தேர்தல் அலுவலர்களும் உடந்தை. எனது கூட்டங்கள் பலவற்றில் நான் ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழிவிட்டிருக்கிறேன். தலைவர் கருணாநிதி கொண்டுவந்தது 108 ஆம்புலன்ஸ் திட்டம்” எனத் தெரிவித்தார்.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel