சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவின் சேலம் மற்றும் விருத்தாசலக் கூட்டத்தில் 5 பேர் வெயிலின் கொடுமையால் மரணமடைந்தனர். இந்நிலையில் திருச்சி பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பிரச்சாரம் செய்கிறார். இதில் 5 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகள், மோர், ஜூஸ் பாக்கெட்டுகள் தொண்டர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் 20 ஆம்புலன்ஸ் வேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி பாதுகாப்புக் காரணங்களுக்காக கனரக வாகனங்கள் திருச்சி நகருக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.
அதிமுக தொண்டர்களுக்குத் தண்ணீர் பாக்கெட்டுகள்
By Balaji
|
Published on 23 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








